புதிய விடுதலை கல்வி பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை
இந்த புதிய விடுதலை கல்வி பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளையானது (தி நீயூ லீட்) இந்தியாவில் சமுதாயத்தில் பின்தங்கிய மற்றும் கல்வி பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம், கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் பொன்றவற்றை உயர்த்துவதை நொக்கமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு அரசுசாரா அமைப்பாகும்.
இந்த அறக்கட்டளையானது 1991ம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பானது பதிவு எண்.934-2000,12அஅ, வருமான வரிச்சட்டம் 1961-ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்பொது இந்த புதிய லீட் அறக்கட்டளையானது சென்னையில் பெருங்குடி நகர்புற இரயில் நிலையத்திற்கு வெகு அருகாமையில் அமைந்துள்ள திருவள்ளுவர் நகர் சேரி மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் நோக்கோடு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இந்த பரவலான சேரியானது, முக்கியமாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சமூக மற்றும் வளர்ச்சி திட்டங்களின் காரணமாக இடம்பெயர்ந்தோர் நிறைந்துள்ள இடமாகும். இந்த நகர சேரியானது 50 ஆண்டுகளுக்கும் மேலாக பெருங்குடி இரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. 2000-ற்கும் மேற்பட்ட குடும்பங்களை கொண்ட இந்த பகுதியின் உள்ளுர் பெயரானது கல்லுக்குட்டை என்பதாகும்.
இங்குள்ள தெருக்கள் சிறிய மழை நேரங்களில் கூட தண்ணீர் தேங்கி பயன்படுத்துவதற்கு இயலாத வகையில் மிகவும் மோசமாகிவிடும். இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பான்மையினர், வீடு மற்றும் அலுவலக பராமரிப்பு வேலைகள், கட்டுமானம், காவல் பணிகள் போன்ற அமைப்புசாரா பிரிவில் உள்ள நிரந்தரமற்ற பாதுகாப்பற்ற பணிகளை செய்துவருகின்றனர். ஏழுத்தறிவின்மை, மது, போதை, வேலையின்மை மற்றும் குழந்தைத் திருமணம் போன்ற சமூகப் பிரச்சனைகள் இந்த பகுதியில் அதிகமாக காணப்படுகிறன. இந்த பகுதியில் சரியான சாலைகள், தண்ணீர் வசதி போன்றவை இல்லாத காரணத்தினால் தனியார் தண்ணீர் விநியோகிப்பவர்களையே இங்குள்ளவர்கள் சார்ந்துள்ளனர்.
நூலகம்
பெருங்குடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சிறிய நூலகமானது குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அவர்கள் பள்ளி நேரங்களுக்குப் பிறகு தங்கள்அறிவினை வளர்த்துக்கொள்ள ஏற்றதாக அமைந்துள்ளது.
கூடை தயாரித்தல்
இப்பகுதியில் உள்ள பெண்கள் வருமானம் ஈட்டும் திட்டங்களில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இங்கு வனஜாலயத்துடன் இணைந்து கூடை தயாரித்தல் கலை கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண்கள் தங்கள் வீடுகளிலேயே இருந்து கொண்டு கையால் பின்னப்பட்ட கூடைகள் தயாரித்து அதன் மூலம் சுயமாக சம்பாதிக்கின்றனர்.
தையற்கலை பயிற்சி மையம்
இங்குள்ள பெண்கள் தையற்கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். ஆகவே அவர்களுக்கு உதவிடும் நோக்கோடு இந்த மையத்தில் தையற்கலை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டு தொடந்து நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி வகுப்புகள் மூலமாக பெண்கள் தங்கள் கைவினைத்திறனை வளர்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் அவர்கள் சுய வருமானம் ஈட்டக்கூடிய அளவிற்கு இந்த பயிற்சி அவர்களுக்கு உறுதுணை புரிகின்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
இங்குள்ள குழந்தைகள் குறிப்பாக இளம்பருவத்தினர், இளைஞர்கள், பெண்கள் குழுக்கள் பொன்றவர்களுக்காக, தனித்தனி பிரிவானருக்கான சுகாதாரம், தொற்று மற்றும் அல்லாத நோய்கள், குழந்தைகள் உரிமை, பெண்கள் உரிமை, இரத்ததானம், மது மற்றும் போதை அடிமை, சூழல் போன்ற தலைப்புகளின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திட்டமானது தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக மக்கள் தங்கள் உரிமைகள், கடமைகள், தற்போது செயல்படுத்தப்பட்டவரும் மக்கள் நலத் திட்டங்கள், தங்களைச் சுற்றியுள்ள சுகாதார பிரச்சனைகள், சரியான நேரத்தில் அதனை தடுப்பது, மருத்துவ உதவிகள் போன்றவற்றை அறிந்து கொள்வது மட்டுமன்றி அதற்கான தீர்வுகளை காண்பது போன்றவற்றை மக்களுக்கு எடுத்துரைப்பதை நோக்கமாக கொண்டு இத்திட்டமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.